Home இலங்கை அரசியல் குப்பை குவியல்கள் வெளியேறி சுத்தமானது மொட்டு : இராஜாங்க அமைச்சர் விளாசல்

குப்பை குவியல்கள் வெளியேறி சுத்தமானது மொட்டு : இராஜாங்க அமைச்சர் விளாசல்

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்த குப்பைக் குவியல்கள் இல்லாமல் போய், தற்போது மிகவும் தூய்மையான, சுத்தமான பொதுஜன பெரமுன உருவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த (Indika Anuruddha)தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச(namal rajapaksa) ஜனாதிபதியாக வருவதற்கு இலங்கையில் பல இளைஞர்கள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வரலாற்றில் நடக்கப்போகும் சம்பவம்

வரலாற்றில் நாற்பது வயதுக்கு குறைவான ஒருவரை ஜனாதிபதியாக்கும் சந்தர்ப்பம் இதுவரை இருந்ததில்லை என்றும் அது இம்முறை நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய மொட்டு கட்சி உறுப்பினர்கள்

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உட்பட முக்கிய மொட்டு கட்சி உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கவுள்ளதாக வெளிப்படையாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version