Home இலங்கை அரசியல் போதைப்பொருட்களை அழிக்கும் எரிசாலை தொடர்பில் வெளியான தகவல்

போதைப்பொருட்களை அழிக்கும் எரிசாலை தொடர்பில் வெளியான தகவல்

0

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதைப் பொருட்களை அழிக்கும் நோக்கில் வனாத்தவில்லுவையில் நிர்மாணிக்கப்பட்ட எரிசாலை அடுத்த மாதம் திறந்து வைக்கப்படுமென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 300 கிலோகிராம் ஹெரோயின் முதல் நாளில் அழிக்கப்படும் என அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விஷம், அபின் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிமுறைகள் என்பன நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே விஜயதாச இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மரக்கிளையொன்று முறிந்து விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

புதிய விதிமுறை

புதிய விதிமுறைகளின் கீழ் வழக்கை முடிப்பதற்கு முன் கையிருப்பு மற்றும் தேவையான பிற ஆதாரங்களின் மாதிரியைப் பெற்ற பிறகு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட முடியும் என அவர் கூறியுள்ளார்.

நீதவான் காவல்துறை சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன் முறையான நடைமுறையின் கீழ் போதைப்பொருள் அழிக்கப்படும் என விஜயதாச தெரிவித்துள்ளார்.

மேலும் தகனமேடை திறக்கப்பட்ட பின்னர் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மாதம் ஒருமுறை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்மோக் பிஸ்கெட்களால் உயிருக்கு ஆபத்து: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

ஈரான் உடனான தொடர்பு: அமெரிக்கா விடுத்த பகிரங்க எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version