வடக்கு மாகாணத்தில் உள்ள திறமை மிக்க வீரர்களை தேசிய மட்ட அணிகளில் உள்வாங்க
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சுக்கான உப குழுக் கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று(20.02.2025) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும்
தெரிவிக்கையில்,
“போதைப்பொருள் பாவனை, சமூக வலைத்தளங்களில் இருக்கும் இளைஞர், யுவதிகளின்
அவதானத்தை நல்ல வழியில் கொண்டு வர விளையாட்டு துறை காணப்படுகின்றது. அதனை
ஊக்குவிக்க வேண்டும்.
எழுத்து மூல முன்மொழிவு
எதிர்வரும் காலங்களில் இது தொடர்பாக கவனம்
செலுத்துவதாகவும், எழுத்து மூல முன்மொழிவுகளை வழங்குமாறும் இளைஞர், விவகார
விளையாட்டு துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
அதற்கு அமைவாக வவுனியா, மன்னார்,
முல்லைத்தீவு மாவட்டங்களில் விளையாட்டுத்துறை சார்பாக ஏதாவது பிரச்சனைகள்
இருப்பின் எனக்கு எழுத்து மூலமாக தந்தால் நடவடிக்கை எடுக்க முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
