Home இலங்கை சமூகம் வருமான வரி குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு

வருமான வரி குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு

0

கடந்த நவம்பர் மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வரிக் கொடுப்பனவுகளை டிசம்பர் 15 அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

குறித்த வரி செலுத்துதலில் முன்கூட்டிய வருமான வரி (AIT), நிறுத்தி வைக்கும் வரி (WHT) மற்றும் முன்கூட்டிய தனிநபர் வருமான வரி (APIT) ஆகியவை அடங்கும்.

வட்டி மற்றும் அபராதம்

எனவே, ஒன்லைன் வரி செலுத்தும் தளம் (OTPP) மூலம் உரிய வரிகளை செலுத்துமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுவதாக இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வரிகளை செலுத்தாததற்கு அல்லது தாமதமாக செலுத்துவதற்கு விதிக்கப்படும் வட்டி மற்றும் அபராதம் எந்த சூழ்நிலையிலும் தள்ளுபடி செய்யப்படாது அல்லது குறைக்கப்படாது என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version