யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலொன்று பரவி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அது எலிக் காய்ச்சல் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளநிலைமைக்கு பின்னர் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் இந்த எலிக்காய்ச்சல் பரவி வந்தது.
தடுப்பு மருந்துகள்
நீண்ட நாள் காய்ச்கல், கண் சிவத்தல், உடல் சோர்வு, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கசித்தல் என்பன எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளாகும்.
இந்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளை அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் பெற்றுக்கொள்ளலாம் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.