யாழ்.(jaffna)மாவட்டத்தில் போதியளவு தேங்காய் உற்பத்தி செய்யப்படுகின்றபோதிலும் அண்மைக்கால விலையேற்றம் காரணமாக பெருமளவு தேங்காய்களை வெளிமாவட்ட வியாபாரிகள் கொள்வனவு செய்து கொண்டு செல்வதால் இங்கு விலை அதிகரித்து காணப்படுவதாக வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் (ibc tamil)மக்கள் கருத்தறியும் நிகழ்வு மக்களை தேடிச் சென்று கருத்துக்களை கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரபல சந்தைகளில் மாலை வேளைகளில் வாகனங்களுடன் தென்னிலங்கை வியாபாரிகள் வருகின்றனர். அவர்கள் மறுநாள் காலை சந்தைக்கு கொண்டு வரப்படும் தேங்காய்களை கொள்வனவு செய்கின்றனர்.இதனால் எமது பகுதியில் தேங்காய் தேவையான அளவு உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் அவர்களின் இந்த செயற்பாட்டால் இங்கு விலையேற்றம் தானாக ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மற்றும் அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள “கிளீன் சிறீலங்கா ”வேலைத்திட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் வியாபாரிகள் தெரிவித்த கருத்துக்கள் காணொளியில்…
https://www.youtube.com/embed/xto_xWBFvqo