Home இலங்கை பொருளாதாரம் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

0

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டின் முதலாம் காலாண்டில் மாத்திரம் ஏற்றுமதிகள் ஊடாக 3 ஆயிரத்து 347 மில்லியன் டொலர்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 5.3 வீத வளர்ச்சியாகும்.

வருமானம் தரும் ஏற்றுமதி

ஆடைகள், புகையிலை உற்பத்திகள், உணவுப்பொருட்கள், தேங்காய் போன்ற பொருட்களின் ஏற்றுமதி ஊடாகவே இந்த வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதே ​நேரம் நடப்பு ஆண்டின் முதலாம் காலாண்டில் இலங்கையின் இறக்குமதி செலவு 4 ஆயிரத்து 887 மில்லியன் டொலர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version