2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் 32.2% அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அரசாங்க நிதிக் குழுவின் தலைவருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கையை இன்றையதினம்(07.01.2025) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் அனுபவிக்கும் பொருளாதார நெருக்கடியை இல்லாதொழிக்க கட்சி பேதமின்றி செயற்பட தயார் என ஹர்ஷ டி சில்வா இதன்போது கூறியிருந்தார்.
முதலாவது நாடாளுமன்ற அமர்வு
அத்துடன், கடந்த அரசாங்கத்தின் போதும் பொருளாதார வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சபாநாயகராக பதவியேற்றுள்ள ஜகத் விக்ரமரத்னவின் கீழ் புதிய வருடத்துக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.