Home இலங்கை பொருளாதாரம் குறைந்தபட்ச சம்பளத்தை 50,000 ரூபாவாக அதிகரிக்கவும்! ஜனாதிபதிக்கு விசேட கடிதம்

குறைந்தபட்ச சம்பளத்தை 50,000 ரூபாவாக அதிகரிக்கவும்! ஜனாதிபதிக்கு விசேட கடிதம்

0

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில்  பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியரின் குறைந்தபட்ச சம்பளத்தை 50,000 ரூபாவாக அதிகரிக்கவும், அரசு ஊழியர்களுக்கு 20,000 ரூபாவுக்கு குறையாத சம்பள அதிகரிப்பை வழங்கவும் சட்டங்களை இயற்றுமாறு பொது சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 2016 ஆம் ஆண்டு இரத்து செய்யப்பட்ட அரசு ஊழியர் ஓய்வூதிய திட்டத்தை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மீண்டும் நடைமுறைபடுத்துமாறும் குறித்த அமைப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.எஸ். சாந்தப்பிரிய ஜனாதிபதிக்கு இது தொடர்பில்  கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

வரவு செலவுத் திட்டம்

இதன்படி எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குமாறு கோரி, 7 சிறப்பு அம்சங்களின் அடிப்படையில் இந்தக் கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பொது ஊழியர்களின் சம்பளத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும், பொது ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்கவும், பொது சொத்து விற்பனையை நிறுத்தவும், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும்,  பொது சேவையில் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கான உள்ளிட்ட விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு அமைப்பானது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version