Home இலங்கை அரசியல் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஜனாதிபதி அநுர வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஜனாதிபதி அநுர வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

0

2025 பெப்ரவரியில் கொண்டு வரப்படும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று (19) தங்காலையில்(tangale) இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார ஸ்திரத்தன்மை

தைரியமுள்ளவர்களால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். ஆரம்பத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதே எங்களின் பலமான சவாலாக இருந்தது.

மிகக் குறுகிய காலத்தில், நாட்டுக்கு சாதகமான ஜனநாயக அமைப்புகளுடன் மிகச் சிறந்த ஒப்பந்தங்களைச் செய்து நம்பகமான பொருளாதாரத்தை உருவாக்கினோம்.அதற்கான பலனை டிசம்பரில் அடைவோம்.

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு

பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்குள் வரவு செலவுத் திட்டத்தை
தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன்போது அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதாகவும், வறிய மற்றும் ஊனமுற்ற சமூகத்தினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version