Home இலங்கை அரசியல் பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளின் பிரசன்னம் அதிகரிப்பு

பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளின் பிரசன்னம் அதிகரிப்பு

0

பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளின் பிரசன்னம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரச பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்பதனை தடை செய்யும் சுற்று நிருபத்தை மீளவும் அமுல்படுத்த வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரியவிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்பது அதிகரித்துள்ளதாக ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இவ்வாறு அரசியல்வாதிகள் பங்கேற்பதனால் பெற்றோருக்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன் மாணவர்களின் கற்கை நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் பாடசாலை நிகழ்வுகளில் பங்கேற்ற போது அப்போதைய எதிர்க்கட்சியான தற்போதைய அரசாங்க உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

தற்போதைய அரசாங்கத்துடன் இந்த எதிர்ப்பு வெளிப்பாட்டுக்கு ஆசிரியர் சங்கமும் ஒத்துழைப்ப வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தற்போதைய அரசாங்கம் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டு சிறிது காலத்திலேயே அளித்த வாக்குறுதிகளை மறந்து செயற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.   

NO COMMENTS

Exit mobile version