Home உலகம் அமெரிக்காவில் அதிகரித்த கடும் பனிப்பொழிவு: விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் அதிகரித்த கடும் பனிப்பொழிவு: விமானங்கள் இரத்து

0

அமெரிக்காவில் (USA) தற்போது நிலவும் அதிக பனிப் பொழிவுடனான குளிர் காலநிலை காரணமாக மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காலநிலையை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதன்காரணமாக அமெரிக்காவின் பல விமான நிலையங்களில் விமானங்கள் தாமதமாவதுடன், பல விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் 

மேலும், செயின்ட் லூயிஸ் (St Louis) மற்றும் மிசோரி (Missouri) ஆகிய விமான நிலையங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கன்சாஸ் மற்றும் மிசோரி நகரங்களுக்குப் பனிப்புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது அங்கு தேங்கியுள்ள பனிக் கட்டிகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவசரகால நிலை

அதேநேரம், அமெரிக்காவின் கென்டக்கி (Kentucky), வர்ஜீனியா (Virginia), மேற்கு வர்ஜீனியா, கன்சாஸ் (Kansas), ஆர்கன்சாஸ் (Arkansas) மற்றும் மிசோரி ஆகிய மாநிலங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தற்போது மத்திய அமெரிக்காவில், மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

https://www.youtube.com/embed/zDPD31gAOn0

NO COMMENTS

Exit mobile version