Home இலங்கை சமூகம் அதிகரிக்கும் தொழுநோய் பாதிப்பு

அதிகரிக்கும் தொழுநோய் பாதிப்பு

0

மொரட்டுவ – எகொடஉயனவில் தொழுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து சுகாதார
அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களில் ஆறு சிறுவர்கள் உட்பட 23 நோயாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேகத்திற்கிடமான 31 பேருக்கு தோல் மருத்துவ மருத்துவமனைக்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் உட்பட 45 நோயாளர்கள் 

கடந்த ஆண்டு, ஒன்பது சிறுவர்கள் உட்பட 45 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

தொழுநோய் குணப்படுத்தக்கூடியது, ஆனால் நோயாளிகள் நோயை மறைப்பது குணமாவதை
தாமதப்படுத்துவதுடன் நிலைமையை மோசமாக்குகிறது என வைத்தியர்கள்
தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவமனைகளில் இரகசியத்தன்மை பராமரிக்கப்படுகிறது எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version