Home இலங்கை அரசியல் பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!

பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!

0

ஓர் அர்த்தமுள்ள மாற்றத்துக்காக – உண்மையிலேயே அனைவருக்கும் உரித்தான இலங்கை தேசத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘சுதந்திரம்’ என்பது தேசத்தின் இறைமை மட்டுமன்று. அது கண்ணியம், நீதி மற்றும் ஒடுக்குமுறை இல்லாத வாழ்வுக்காக அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்துவதாகும்.

சமமான வாய்ப்புகள்

இனம், மதம், சாதி, பாலினம் அல்லது வர்க்கம் என்ற பேதமின்றி அனைத்து சமூகங்களும் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பதற்கு சமமான வாய்ப்புகள் கிடைக்கின்ற, அனைவருக்கும் உரிய மதிப்பும் பெறுமானமும் கிடைக்கின்ற ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே உண்மையான சுதந்திரம் சாத்தியமாகும் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க நாளில், நாம் அடையாளக் கொண்டாட்டங்களுக்கு அப்பால் சென்று ஓர் அர்த்தமுள்ள மாற்றத்துக்காக – உண்மையிலேயே அனைவருக்கும் உரித்தான இலங்கை தேசத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ என்பது வெறுமனே ஒரு எண்ணக்கரு மட்டுமன்று. அது செயற்பாட்டுக்கான ஓர் அழைப்பு. அது ஆழமான ஜனநாயகம் மற்றும் பொருளாதார நீதிக்கு முன்னுரிமை அளிக்கும் எண்ணக்கருவாகும். 

NO COMMENTS

Exit mobile version