Home இலங்கை அரசியல் இந்தியாவுடனான ஒப்பந்தம் விரைவில் நாடாளுமன்றில்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

இந்தியாவுடனான ஒப்பந்தம் விரைவில் நாடாளுமன்றில்! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

0

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட விடயங்களை அரசு
இரகசியமாக வைத்துள்ளது என்று எதிரணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்திய ஒப்பந்தங்கள்

அந்த
ஒப்பந்தங்கள் விரைவில் மக்களின் பார்வைக்காக வழங்கப்பட வேண்டும் என்றும்
வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே, இந்திய ஒப்பந்தங்கள்
விரைவில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என்று அமைச்சர் நளிந்த கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாடாளுமன்றத்தின் பார்வை

“இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் புரிந்துணர்வு அடிப்படையில் இரு நாடுகளும்
செயற்பட வேண்டும்.

தான்தோன்றித்தனமாக அவற்றைப் பகிரங்கப்படுத்த முடியாது.

சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடல் நடத்திய பின்னர்
நாடாளுமன்றத்தின் பார்வைக்காக அவை முன்வைக்கப்படும்.

இதில் மறைப்பதற்கு
ஒன்றும் இல்லை. நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தங்களில் நாங்கள்
கைச்சாத்திடவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version