Home இலங்கை அரசியல் இலங்கையை வந்தடைந்தார் எஸ். ஜெய்சங்கர்

இலங்கையை வந்தடைந்தார் எஸ். ஜெய்சங்கர்

0

இந்திய வெளிவிவகார அமைச்சர் (Indian External Affairs Minister) எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (4) காலை இலங்கை வந்தடைந்துள்ளார்.

அமைச்சர் ஜெய்சங்கருடன் (S. Jaishankar) இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் வருகை வருகை தந்துள்ளனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (anura kumara dissanayaka) மற்றும் பிரதமரை சந்தித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.

இலங்கையின் சிறுபான்மை தமிழர்

மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய முதலீடுகள், பிராந்திய பாதுகாப்பு, இலங்கையின் சிறுபான்மை தமிழர் தொடர்பான அணுகுமுறை குறித்த அனுரகுமாரதிசநாயக்கவின் நிலைப்பாட்டை புதுடில்லி கேட்டறிவதற்கான வாய்ப்பாக இந்த விஜயம் காணப்படும்.

இந்தியாவின் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை மற்றும் சாகர் கொள்கைகளின் அடிப்படையில் இந்த விஜயம் பரஸ்பர நன்மைக்காக நீண்ட ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கும் இரு தரப்புகளினதும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றதன் பின்னர் இந்திய அமைச்சர் ஒருவர் இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.    

NO COMMENTS

Exit mobile version