Home முக்கியச் செய்திகள் பாகிஸ்தான் விமான தளங்களை தாக்கிய இந்தியா

பாகிஸ்தான் விமான தளங்களை தாக்கிய இந்தியா

0

இந்திய பாகிஸ்தான் விவகராம்
ஒரு அமைதியான சூழலுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த அமைதி எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது.

பல்லாண்டுகால விரோதத்தை கொண்ட இரு நாடுகளும் தத்தம் பெருமைகளை இன்னமும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில்
மிகப்பெரும் அழிவுகளை உண்டாக்கும் என்று எதிர்வு கூறப்பட்ட போர் பதற்றம்
சமூகமான ஒரு நிலையை எட்டியிருப்பது
ஒரு இயங்கியல் அதிசயமே.

இந்த விவகரத்தில் ஏன் அமெரிக்கா திடீரென மத்தியஸ்தம் வழங்க தயாரானது , உண்மையில் போர் நிறைவடைந்துவிட்டதா?

இல்லையென்றால் இந்திய மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி இந்தியர்களை ஏமாற்றிவிட்டாரா நரேந்திரமோடி

இப்படி எழும் கேள்விகளுக்கான பதில்களை விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு

முதலாம் இணைப்பு

இந்தியாவின் (India) தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுத மையம் சேதமடைந்ததாகவும் அணுக்கதிர்கள் கசிய தொடங்கி உள்ளதாகவும் வெளியான செய்தி உலகை ஆட்டம் காண வைத்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள கிரானா ஹில்ஸில் உள்ள அணுசக்தி நிலையத்தை இந்திய ஆயுதப் படைகள் தாக்கவில்லை என்பதை விமானப்படை நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி (Air Marshal AK Bharti) தெரிவித்துள்ளார்.

இன்று (12.05.2025) நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அணுக்கதிர்கள் கசிய தொடங்கி

கிரானா ஹில்ஸில் சில அணுசக்தி நிலையங்கள் இருப்பதாக எங்களிடம் கூறியதற்கு நன்றி. அது பற்றி எங்களுக்குத் தெரியாது. நாங்கள் கிரானா ஹில்ஸைத் தாக்கவில்லை என்றும் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி குறிப்பிட்டுள்ளார்.   

இந்நிலையில், இந்தியாவின் விமான தாக்குதலுக்குப் பின் அணுக்கதிர்வீச்சை ஆய்வு செய்யும் திறன்மிக்க D300 அமெரிக்க விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கியதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுத மையம் சேதமடைந்ததாகவும் அணுக்கதிர்கள் கசிய தொடங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://www.youtube.com/embed/qcnlZRAIB34https://www.youtube.com/embed/nVtmXsffags

NO COMMENTS

Exit mobile version