Home முக்கியச் செய்திகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஷ்ரேயாஸ் ஐயர்.!

தீவிர சிகிச்சைப் பிரிவில் ஷ்ரேயாஸ் ஐயர்.!

0

இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விலா எலும்புக் கூண்டு காயம் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதாக மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்ததையடுத்து அவர் இவ்வாறு வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சனிக்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் களத்தடுப்பு செய்யும் போது ஐயருக்கு காயம் ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவு

இந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐயர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Image Credit: Sports Tak

இதன்படி, கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக, அவர் சுமார் ஐந்து முதல் ஏழு நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது ஆக்ரோஷமான மிடில் ஆர்டர் துடுப்பாட்டத்திற்கு பெயர் பெற்ற 30 வயதான வலது கை வீரரான ஐயர், இந்தியாவின் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

இந்நிலையில், ஐயர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்களும் அணி வீரர்களும் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version