Home இலங்கை பொருளாதாரம் யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்

யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்

0

இந்தியாவிலிருந்து MV Express (Cordelia Cruises) அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல் ஒன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.

இன்று (15) மாலை வரை குறித்த கப்பல், காங்கேசன் துறையில் தரித்து நிற்கும் என துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து புறப்பட்ட குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.

1,391 சுற்றுலாப்பயணிகள்

10 தளங்களை கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்த கப்பலானது இந்தியாவில் இருந்து சுமார் 1,391 சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்ட நிலையில் சுமார் 584 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.

குறித்த கப்பலானது கடந்த 2023 ஆம் ஆண்டு 9 தடவைகளும், 2024ஆம் ஆண்டு 6 தடவைகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this

https://www.youtube.com/embed/kK6VaumJ8z0

Source: https://ibctamil.com/article/india-s-cordelia-cruises-ship-arrive-in-jaffna-kks-1755233887

NO COMMENTS

Exit mobile version