Home இலங்கை அரசியல் முதல் முறையாக விவசாய ஒத்துழைப்பில் இணையும் இந்தியாவும் இலங்கையும்

முதல் முறையாக விவசாய ஒத்துழைப்பில் இணையும் இந்தியாவும் இலங்கையும்

0

இந்தியாவும் இலங்கையும் முதல் தடவையாக விவசாயம் தொடர்பில் கூட்டுப்பணிக்குழு
சந்திப்பை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தக்கூட்டம் நேற்று புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.

முக்கிய கூட்டம் 

இலங்கை விவசாய அமைச்சின் செயலாளர் டி பி விக்ரமசிங்க மற்றும் இந்திய
விவசாயத்துறை தேவேஸ் சதுர்வேதி ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம்
நடத்தப்பட்டுள்ளது.

பண்ணை இயந்திரமயமாக்கல், இயற்கை விவசாயம், விதைத் துறை மேம்பாடு மற்றும்
விவசாய தொழில்முனைவோர் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து
இதன்போது இரண்டு தரப்பினரும் விவாதித்துள்ளனர்.

டிஜிட்டல் விவசாயம், பயிர் காப்பீடு மற்றும் விவசாய தொடக்க நிறுவனங்கள் போன்ற
முயற்சிகள் குறித்தும் இரண்டு தரப்பும் கலந்துரையாடியதாக இந்திய ஊடகம் ஒன்று
செய்தி வெளியிட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version