திருகோணமலை- சம்பூரில் செயற்படவுள்ள இலங்கை – இந்திய கூட்டு முயற்சியான சூரிய
மின்சார உற்பத்தி நிலையத்தின் தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு, அலகு
ஒன்றுக்கு, 5.97 அமெரிக்க சென்ட்ஸ்(us cents) மின்சாரத்தை விற்பனை செய்யும் என்று
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
முன்னதாக சுமார் 7.00 அமெரிக்க சென்ட்ஸ்களுக்கு(us cents) இந்த விற்பனை இடம்பெறுவதற்கு
இணங்கப்பட்டிருந்தது.பின்னர் அது 6.69 அமெரிக்க சென்ட்ஸ்களாக(us cents) குறைக்கப்பட்டது
என்று அவர் கூறியுள்ளார்.
எனினும் சில நாட்களுக்கு முன்னர் அதனை 5.97 அமெரிக்க சென்ட்ஸ்களில்(us cents) பெறுவதற்கு
அரசாங்கம் இணக்கம் கண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொது நிகழ்வு ஒன்றில்
தெரிவித்துள்ளார்.
கொள்முதல் விலை
அரசுக்குச் சொந்தமான இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய வெப்ப மின்
கழகம் இடையேயான கூட்டு முயற்சியின்கீழ், சம்பூரில் 135 மெகாவோட் சூரிய மின்சார
உற்பத்தி நிலையம் அமைக்கவுள்ளது.
இலங்கை மின்சார சபை கூடுதல் கடனில் சிக்க விரும்பாததால் இதற்கு முதலீடுகளை
அழைத்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதுடன் இதில் கொள்முதல் விலை முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார்.