Home சினிமா முன்னணி ஹீரோவிற்கு இணையான சம்பளம் கேட்கும் பிரதீப் ரங்கநாதன்.. எவ்வளவு தெரியுமா

முன்னணி ஹீரோவிற்கு இணையான சம்பளம் கேட்கும் பிரதீப் ரங்கநாதன்.. எவ்வளவு தெரியுமா

0

பிரதீப் ரங்கநாதன்

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன்.

கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கி கொடுத்தது. ஆனால், லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் LIK மற்றும் dragon ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகியுள்ளது. இதில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் Dragon திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் LIK படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடந்து வருகிறது.

பிக்பாஸ் 8 முடிந்ததும் தனது வாழ்க்கையில் இருந்து ஒருவரை தூக்கி எறிந்த அன்ஷிதா.. யார் அது, ஓபனாக கூறிய பிரபலம்

பிரதீப் ரங்கநாதன் சம்பளம்

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோவாக மாறியுள்ள பிரதீப் ரங்கநாதன், ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கேட்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 18 கோடி சம்பளம் கேட்பதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்கள் வாங்கி வரும் சம்பளத்திற்கு இணையாக பிரதீப் ரங்கநாதன் சம்பளம் கேட்கிறார் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

NO COMMENTS

Exit mobile version