Home சினிமா திடீரென தனது Project படப்பிடிப்பை முடித்த மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்… ரசிகர்கள் ஷாக்

திடீரென தனது Project படப்பிடிப்பை முடித்த மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்… ரசிகர்கள் ஷாக்

0

மகாநதி சீரியல்

மகாநதி சீரியல் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.

குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்க ஒளிபரப்பாகும் இந்த சீரியல் 4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கைப் பயணத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

இப்போது கதையில் வெண்ணிலா, அவரின் மாமா மற்றும் பசுபதி இவர்கள் 3 பேரில் யாராவது ஒருவர் உண்மையை கூறினால் தான் விஜய் வெளியே வர முடியும் என்ற நிலை உள்ளது.

காவேரி, கண் விழித்த வெண்ணிலாவை சந்தித்து விஜய்யை வெளியே கொண்டு வந்தால் அவர் வாழ்க்கையில் இருந்து தான் விலகிவிடுவதாக சத்தியம் செய்கிறார்.

முடிந்த படப்பிடிப்பு

எப்போதும் தனது படப்பிடிப்பு சீரியல்களின் அப்டேட் வெளியிடும் பிரவீன் பென்னட் படப்பிடிப்பு முடிந்ததாக கேக் போட்டோ வெளியிட்டார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் மகாநதி சீரியல் முடிந்துவிட்டதா என ஷாக் ஆனார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் பிரவீன் பென்னட் ஜியோ ஹாட்ஸ்டாருக்காக ஒரு வெப் தொடர் இயக்கி வந்துள்ளார், அதன் படப்பிடிப்பு முடிந்ததற்கு தான் அவர் பதிவு போட்டுள்ளாராம். 

NO COMMENTS

Exit mobile version