இந்தியா (India) தற்போது தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி கதைப்பதை மிகவும் ஆக்கப்பூர்வமானதாக பார்க்கலாம் என பிரித்தானியாவின் அரசியல் ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த வவிடயத்தை நேற்றைய தினம் (25) ஊடகமொன்றிக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “என்பதுகளின் ஆரம்பத்தில் விடுதலை புலிகள் அமைப்புக்கள் ஆரம்பமாகிய போது அந்த அமைப்புக்களில் பல அமைப்புக்களை உருவாக்கி அவர்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தி தமிழர்களுக்கிடையில் ஒரு ஒற்றுமையற்ற தன்மையை மேற்கொள்ள முனைந்ததில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.
வெளிவிகார கொள்கை
அதற்கான காரணம் இந்தியா, தமிழ் மக்களை பலவீனமாக வைத்திருக்க வேண்டுமென நினைத்தது.
தற்போது கூட ஒரு இந்தியா ஆய்வாளர், இப்போது இலங்கை அரசின் வெளிவிகார கொள்கையானது இந்தியாவிற்கு பாரிய தோல்வி என கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தியாவின் பிடிக்குள் இலங்கை இல்லை என்பது தற்போது இந்தியாவிற்கு சாவாலாக அமைந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவிற்கு தமிழர்களின் உதவி தேவைப்படுகின்றது.
தமிழ் தரப்புக்கள்
தமிழ் தரப்புக்கள் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும், அத்தோடு நடந்து முடிந்த தேர்தல் களம் தற்போது தமிழ் மக்கள் இந்தியாவினாலும் சரி தமிழ் அரசியல் கட்சிக்களினாலும் சரி இனி ஏமாற்றப்பட முடியாது என்பதை உறுதி செய்துள்ளது.
இந்திய அரசியல்வாதிகள் இலங்கைக்கு வரும் போது எல்லாம், தமிழ் மக்களும் சிங்கள மக்களை போல எல்லா வசதிகளுடனும் உரிமைகளுடனும் வாழ வேண்டும் என தெரிவித்தாலும் அது தொடர்பில் அவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ வேண்டுமென்றால் அவர்களுக்கான அதிகாரங்கள் வேண்டும், அந்த அதிகாரத்திற்காகத்தான் மாகாண சபை தேர்தலை கொண்டு வந்ததாக அறிவித்தார்கள் ஆனாலும் அப்போதும் இந்தியாவால் எந்த மாற்றமும் நிகழவில்லை.
அது இந்தியாவிற்கான மிகப்பெரிய தோல்வி, அந்த தோல்வியின் வெளிப்பாடுதான் தற்போது இந்தியா பாரிய பூகோள அரசியல் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
மிகப்பெரிய தோல்வி
இனி வடக்கு மற்றும் கிழக்கில் இந்தியாவால் ஏதும் செய்ய முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றது.
அத்தோடு, தற்போதுள்ள அதானி குழுமம் தொடர்பிலும் இந்தியாவிற்கு அநுர குமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றால் அதற்க்கு இந்தியாவிற்கான ஒரே தீர்வு தமிழ் மக்கள்தான்.
விரும்பியோ விரும்பாமலோ இனி இந்தியா தமிழ் மக்களுடன் ஒரு நல்லுறவை பேண வேண்டும், விடுதலை புலிகள் உட்பட இந்தியாவை ஒரு எதிரி நாடாக எந்த தமிழர்களும் பார்க்கவில்லை.
இலங்கையை கைப்பற்ற அமரிக்காவிற்கு (America) தமிழர்கள்தான் வேண்டுமென இந்தியாவிற்கு நன்கு தெரியும் ஆகையாலேயே இந்த சுமூக நடவடிக்கைகள் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.