Courtesy: Sivaa Mayuri
தென்னிலங்கையில் வீடற்ற மக்களுக்காக இந்தியா 1300 வீடுகளை நிர்மாணித்து வருவதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் அண்மைய ஆண்டுகளில், கல்வித் துறையில் இந்தியா மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கண்டுள்ளது என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
1300க்கும் மேற்பட்ட வீடுகள்
இதனடிப்படையில், இலங்கையில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இத்தகைய முன்னேற்றங்களின் நன்மைகளை இந்திய அரசு உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தென் மாகாணத்தில் இந்தியா பல மனிதனை மையமாகக் கொண்ட திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் வீடற்ற குடும்பங்களுக்காக 1300க்கும் மேற்பட்ட வீடுகள், இந்தியாவினால் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.