இந்தியா(India) மற்றும் இலங்கை(Sri lanka) அணிகளுக்கிடையிலான போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3ரி20 மற்றும் 3 ஒருநாள் தொடர் போட்டிகளில் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் முதலில் ரி20 தொடர் நடைபெறவுள்ளது.
கால அட்டவணை
இதற்கமைய, ரி20 தொடர்கள் கொழும்பில்(Colombo) உள்ள பல்லேகலேயில் நடைபெறுகிறது.
அதன்படி, முதல் ரி20 தொடர் ஜுலை 26ம் திகதியும், 2வது ரி20 தொடர் ஜுலை 27ம் திகதியும், 3வது ரி20 தொடர் ஜுலை 29ம் திகதியும் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஆக.1,4,7 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது.இந்த போட்டிகள் கொழும்பில் நடைபெற உள்ளது.
தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர்(Gautam Gambhir) நியமிக்கப்பட்ட பிறகு, இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.
மேலும், ரி20 அணிக்கு ஹர்த்திக் பாண்டியா(Hardik Pandya) அணித்தலைவராக நியமிக்கப்படலாம் எனவும், ஒருநாள் அணிக்கு கே.எல்.ராகுல்(KL Rahul) அணித்தலைவராக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
???? NEWS ????
Fixtures for the upcoming India tour of Sri Lanka announced! ????#TeamIndia | #SLvIND pic.twitter.com/oBCZn0PlmK
— BCCI (@BCCI) July 11, 2024