Home விளையாட்டு ரி 20 உலககிண்ண தொடர் : அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 08 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா

ரி 20 உலககிண்ண தொடர் : அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 08 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா

0

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ரி 20 உலககிண்ண போட்டியில் நேற்று(12) நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவை 07 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

 நியுயோர்க்கில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களை எடுத்தது.

இந்தியா சார்பில் 4 ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பதிலளித்து ஆடிய இந்திய அணி

பதிலுக்கு 111 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 18.2 ஓவரில் 111 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சூர்யகுமார் யாதவ் 50, துபே 31 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அமெரிக்கா தரப்பில் சௌரப் நேத்ரவல்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.   

      

Source: https://ibctamil.com/article/india-won-by-7-wkts-against-usa-1718237334

NO COMMENTS

Exit mobile version