இந்தியன்
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அஜித்தை அசர்பைஜானில் சந்தித்த வெங்கட் பிரபு.. விஜய் உடன் இருந்தாரா?
இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘இந்தியன் 2’ இன்று வெளியாகி கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் இப்படம் வசூலில் ரீதியாக வெற்றி பெரும் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
அசம்பாவிதம்
இந்நிலையில் இந்தியன் 2′ திரைப்பட ரிலீஸை கொண்டாடும் வகையில் திரையரங்கிற்கு வெளியே 5 கிலோ எடை கொண்ட கற்பூரத்தை கமல் ரசிகர்கள் கொளுத்தி உள்ளனர்.
கொழுந்துவிட்டு எரிந்த தீ அருகில் இருந்த பேனரில் பற்றும் நிலை ஏற்பட்டதால், போலீசார் கற்பூரம் வைக்கப்பட்டிருந்த இரும்பு ஸ்டாண்டை கீழே தள்ளி தீயை அணைத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.