Home சினிமா நிஜத்தில் வந்த இந்தியன்.. விழுப்புரம் கலெக்டர் ஆபிஸில் கடிதத்தால் பரபரப்பு

நிஜத்தில் வந்த இந்தியன்.. விழுப்புரம் கலெக்டர் ஆபிஸில் கடிதத்தால் பரபரப்பு

0

இந்தியன் 2 படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்கள் பெற்றது. படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது என விமர்சனங்கள் வந்ததால் ரன்டைம் தற்போது 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டு இருக்கிறது.

நேர்மையாக இல்லாமல், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தேடி சென்று வர்மக்கலை மூலமாக இந்தியன் தாத்தா கொலை செய்வது தான் இந்த படத்தின் கதை.

விழுப்புரம் கலெக்டர் ஆபிஸ்

தற்போது இந்தியன் 2 பெயரை பயன்படுத்தி விழுப்புரம் கலெக்டர் ஆபிசில் ஒட்டப்பட்ட கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

“லஞ்சம் வாங்காமல் வேலை செய்யுங்கள், ஏழை மக்களின் மனுவை வாங்கி உதவி செய்யுங்கள் – இந்தியன் 2” என குறிப்பிட்டு இருக்கும் லெட்டரை யாரோ கலக்டர் ஆபிஸ் பாத்ரூம் கதவில் ஒட்டிவிட்டு சென்று இருக்கின்றனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதை ஒட்டியது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது. 

NO COMMENTS

Exit mobile version