Home சினிமா இந்தியன் 2 படம் நஷ்டம் இல்லை லாபமா! உண்மையை உடைத்து கூறிய பிரபலம்

இந்தியன் 2 படம் நஷ்டம் இல்லை லாபமா! உண்மையை உடைத்து கூறிய பிரபலம்

0

இந்தியன் 2

2024ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த திரைப்படம் இந்தியன் 2. உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவான இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத்.. எந்த தொடர் தெரியுமா?

இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் நஷ்டமடைந்துவிட்டது தோல்வியை சந்தித்துள்ளது என கூறி சில தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது. ஆனால், அது உண்மையில்லை படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது என பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

நஷ்டம்? இல்லை லாபமா

“இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய இரு திரைப்படங்களின் மொத்த பட்ஜெட் ரூ. 500 கோடி. இதில் ஒரு பாகத்திற்கு ரூ. 250 கோடி செலவு என வைத்துக்கொள்ளலாம். இதில் 90% சதவீதம் ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் எடுத்துவிட்டது.

இப்படத்தின் OTT உரிமை ரூ. 125 கோடி, சாட்டிலைட் உரிமை ரூ. 68 கோடி. இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 200 கோடி வரை போட்ட காசை எடுத்துவிட்டார்கள். இதன்பின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்தியன் 2 படத்தின் மூலம் வரவேண்டிய தொகை ரூ. 50 கோடி மட்டுமே தான். இதில் கர்நாடகா உரிமை ரூ. 15 கோடிக்கு விற்பனை ஆகிவிட்டது.

இதன்பின் பார்த்தல் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ. 35 கோடி தான் வரவேண்டியது. இதில் தமிழநாடு உரிமை, கேரளா உரிமை, ஆந்திரா உரிமை, இந்தி டப்பிங் உரிமை, வெளிநாட்டி உரிமை மற்றும் ஆடியோ உரிமை என பல இருக்கிறது. இதையெல்லாம் கணக்கு போட்டு பார்த்தால் லைகா நிறுவனத்திற்கு இந்தியன் 2 மிகவும் லாபகரமான படம் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை” என மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version