Home சினிமா இந்தியன் 2 ஐந்து நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இந்தியன் 2 ஐந்து நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

இந்தியன் 2

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 12ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மேலும் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மாரிமுத்த மற்றும் மனோபாலா ஆகியோரையும் மீண்டும் இப்படத்தில் பார்க்க முடிந்தது.

வசூல் 

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாக சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் வெளிவந்து ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 135 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Source: https://cineulagam.com/article/indian-2-movie-5-days-box-office-1721184164

NO COMMENTS

Exit mobile version