Home விளையாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரரின் 41 ஆண்டுகால சாதனையை தகர்த்தார் இலங்கை வீரர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரரின் 41 ஆண்டுகால சாதனையை தகர்த்தார் இலங்கை வீரர்

0

இங்கிலாந்து(england) அணிக்கு எதிராக மான்செஸ்டரில் நேற்று (21) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை(sri lanka) அணிவீரர் மிலன் ரத்நாயக்க(Milan Rathnayake) இந்திய வீரர் ஒருவரின் 41 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய அவர் 09 ஆவது விக்கெட்டுக்கு 72 ஓட்டங்களை சேர்த்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு சாதனை

இதற்கு முன்னர் 1983 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீரர் பல்வந்தர் சந்து(Balwinder Sandhu) என்ற வீரர் 09 ஆவது விக்கெட்டுக்கு 71 ஓட்டங்கள் எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

தடுமாறிய இலங்கை அணிக்கு கை கொடுத்த வீரர்

ஒரு கட்டத்தில் 113 ஓட்டங்களுக்கு 07 விக்கெட்டுக்களை இழந்து இலங்கை அணி தடுமாறியபோது மிலன் ரத்நாயக்க, அணித்தலைவர் தனஞ்செய டி சில்வாவுடன் இணைந்தார்.

அவர் இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து 135 பந்துகளில் 72 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து இலங்கை அணி 236 ஓட்டங்களை பெற உதவினார்.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்களை பெற்றுள்ளது.

NO COMMENTS

Exit mobile version