Home இலங்கை அரசியல் இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவரை சந்தித்த சிறீதரன்

இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவரை சந்தித்த சிறீதரன்

0

இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி ஆகியோரை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு, நேற்றையதினம் (21.08.2024) கொழும்பிலுள்ள தென்னாபிரிக்கத் தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்மக்களின் நிலைப்பாடு மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்த சாதகத் தன்மைகள் குறித்தும், ஈழத்தமிழர்கள் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவை

இதன்போது, காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ICC) வழக்குத் தாக்கல் செய்துள்ள தென்னாபிரிக்கா, ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கும் சர்வதேச நீதியைப் பெற்றுத்தர முயற்சிக்க வேண்டும் என்று சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரிலும் இதுவிடயம் சார்ந்து தங்களின் கரிசனையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version