Home ஏனையவை வாழ்க்கைமுறை அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவிட் தடுப்பூசி: இந்திய மருத்துவர்கள் வெளியிட்டுள்ள தகவல்

அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவிட் தடுப்பூசி: இந்திய மருத்துவர்கள் வெளியிட்டுள்ள தகவல்

0

கொவிஷுல்ட் (Covishield) தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என வெளியாகியுள்ள தகவல் புதிதல்ல எனவும் தடுப்பூசி ஏற்றியவர்களை தைரியமாக இருக்குமாறும் இந்திய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கொவிஷுல்ட் தடுப்பூசி அரிதாக பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரா செனெகா (AstraZeneca) முதன்முறையாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

மேலும், இது மிகவும் அரிதாக சிலருக்கு குருதி உறைவு நோயை ஏற்படுத்தியுள்ளதோடு குருதிக் கலங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

அரிதான பக்கவிளைவுகள்

அதேவேளை, கொவிஷுல்ட் தடுப்பூசி, பல்வேறு குறைபாடுகளை கொண்டுள்ளதோடு அதன் செயற்றிறன் மிகவும் அதிகமாக்கி காட்டப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தது.

அஸ்ட்ரா செனெகா நிறுவனம் தடுப்பூசியில் அரிதான பக்கவிளைவுகள் இருப்பதாக ஒப்புக்கொண்டதை அடுத்து, இந்திய மருத்துவர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மனதளவில் உறுதி

மக்களுக்கு கோவிட் தடுப்பூசியை அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்தே அதில் இருக்கும் பக்க விளைவுகள் குறித்து நன்கு அறிவோம் என இந்திய மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பக்க விளைவுகள் தொடர்பான அச்சத்தை தவிர்த்து மனதளவில் உறுதியாக இருக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சீனாவுக்காக உளவு பார்த்த இருவர் பிரித்தானியாவில் கைது

தென் சீனக்கடலில் தொடரும் பதற்றம்: பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா பீரங்கி தாக்குதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version