இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கொழும்பில் இலங்கை தமிழரசு கட்சி பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்த கலந்துரையாடலானது வரவு – செலவு திட்டத்தின் முதலாவது வாசிப்பு நடைபெற்ற பின்னர் இடம்பெற்றிருக்கின்றது.
இந்நிலையில் இந்த சந்திப்பு பல விவாதங்களுக்கு உள்ளாக்கியுள்ளது.
அதாவது இந்திய தூதரகம் ஒரு வெளிப்படைத்தன்மையுடன் கலந்துரையாடுவதாக இருந்தால் அல்லது தமிழரசுக் கட்சி வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதாக இருந்தால் வடக்கு கிழக்கிலே உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டிருக்க வேண்டும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி….
