Home முக்கியச் செய்திகள் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது
செய்யப்பட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தில்
விடுவிக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நீதிமன்ற உத்தரவானது, நேற்றையதினம் (10) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து
மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை
கடற்படையினர் இரண்டு இந்திய இழுவைப் படகுகளை யும் அதிலிருந்து 17 இந்திய கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.

நீதிமன்ற உத்தரவு

பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களையும், இலுவைப் படகுகளையும் கடற்படையினர் தலைமன்னார்
கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள
அதிகாரிகளிடம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் குறித்த கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த வழக்கு நேற்றையதினம் வியாழக்கிழமை (10) மீண்டும்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு 2
வருட சிறை தண்டனை 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை
விதித்துள்ளதுடன் நபருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதித்து விடுதலை
செய்யப்பட்டனர்.

நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை

மேலும், இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஊடாக இலங்கை இந்திய கடற்பரப்பில்
மீன்பிடியில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்களை அத்து மீறி இலங்கை கடற்பரப்பில்
நுழைந்து மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என்ற கண்டிப்பான உத்தரவு வழங்குமாறு
நீதவான் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
வழங்கினார்.

இந்த நிலையில், விடுதலையான 17 இந்திய கடற்றொழிலாளர்களையும் மிகிரியான தடுப்பு முகாம்
ஊடாக இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் ஊடாக நாட்டுக்கு அனுப்ப
நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மன்று உத்தரவிட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version