Home முக்கியச் செய்திகள் இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்!

0
புதிய இணைப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான பயணத்துக்கு முன்னார் ஜெய்சங்கரின் பயணம் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே, அந்த அமைச்சு இதனை கூறியுள்ளது. 

முதலாம் இணைப்பு

இந்திய (India) வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar) இந்த மாதம் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடக மாநாட்டின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயர்மட்ட பேச்சுவார்த்தைகள்

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான (Sri Lanka) பயணத்தின் போது, இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜெய்சங்கரின் இந்த பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை உறுதிப்படுத்தப்படுமென அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நரேந்திர மோடி இலங்கைக்குப் பயணம் செய்வார் என அதிபரின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க (Ashu Marasinghe) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version