Home இலங்கை அரசியல் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்!

0

இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று (23.12.2025) சந்திக்கவுள்ளார்.

அதன்படி, இன்று (23.12.2025) முற்பகல் இச்சந்திப்பு நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

நிவாரண உதவி

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேற்று (22.12.2025) பிற்பகல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக எஸ். ஜெய்சங்கர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த முக்கிய சந்திப்புகளின் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று (23.12.2025) பிற்பகல் நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கம் பல உதவிகளையும் வழங்கி துணை நின்றது.

இவ்வாறு இந்திய அரசாங்கம் மூலம் வழங்கப்பட்ட ஆதரவை மேலும் உறுதிப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version