இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) சந்தித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) உள்ள விஜேராம இல்லத்துக்கு சென்ற உயர்ஸ்தானிகர், இன்று (05) காலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
கலந்தாலோசிக்கப்பட்ட விடயங்கள்
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
