டுபாயில் (Dubai) இருந்து இலங்கை (Sri Lanka) வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய (Colombo Bandaranaike International Airport) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (12.04.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (12.04.2025) காலை டுபாயில் இருந்து வந்த பிட்ஸ் ஏர் விமானத்தில் ஏ.டி. 822 விமானத்தின் மூலம் வந்துள்ளார்.
கொழும்பு நீதவான்
சந்தேக நபர் விமானத்தில் வைத்து அந்தப் பெண்ணைத் பாலியல் சீண்டல் செய்ததாகவும், இது குறித்து விமானக் குழுவினருக்குத் தெரிவிக்க குறித்த பெண் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் இந்திய பிரஜை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதுடையவர் என்பதுடன் குறித்த இந்திய பிரஜை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
