Home இலங்கை குற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சொக்லேட்டுகளுடன் வந்தவரால் அதிர்ச்சி

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சொக்லேட்டுகளுடன் வந்தவரால் அதிர்ச்சி

0

இலங்கை வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சுமார் 12.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்திற்கு வந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருளை டொபி மற்றும் சொக்லேட்டாக பொதி செய்து கடத்த முயன்றுள்ளார்.

போதைப்பொருள்

கைது செய்யப்பட்ட நபர் இந்தியாவின் சென்னையில் இருந்து கையடக்க தொலைபேசி இலங்கைக்கு கொண்டுவந்து கடை நடத்தி வரும் 45 வயது தொழிலதிபராகும்.

அவரிடம் இருந்து 1 கிலோ 40 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

NO COMMENTS

Exit mobile version