நிலாவேலி சுற்றுலாப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த இரண்டு இந்தியர்களில் ஒருவரின் தங்க நகைகள் திருடப்பட்டதாக உப்புவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் இலங்கை வந்த இரண்டு இந்தியர்களும் நவம்பர் 12 ஆம் திகதி இரவு நிலாவேலி பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர்.
இதன்போது இந்திய நாட்டவர்களில் ஒருவர் தனது கைப்பையில் ஒரு கைக்கடிகாரம், நெக்லஸ், தங்க நகைகள் மற்றும் இந்திய பணத்தை வைத்துக்கொண்டு தூங்கிய நிலையில், மறுநாள் விழித்தெழுந்தபோது, கைப்பை திறக்கப்பட்டிருப்பதைஅவதானித்துள்ளார்.
நிலாவேலி சுற்றுலா பொலிஸார் விசாரணை
இதனையடுத்து பையை சோதனை செய்தபோது, தங்க நகைகள் உட்பட 1.45 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள், பணம் திருடப்பட்டதாக உப்புவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உப்புவேலி பொலிஸ் மற்றும் நிலாவேலி சுற்றுலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
