Home இலங்கை சமூகம் முள்ளியவளையில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு

முள்ளியவளையில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு

0

 முள்ளியவளையில் மாவீரர்களின்
பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு இன்று(15) காலை 11 மணியளவில் உலக
தமிழரின் ஏற்பாட்டில் சமூக செயற்பாட்டாளரும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின்
உறுப்பினர் ஞானதாஸ் யூட்சன் தலைமையில் முள்ளியவளை பரிமத்தியா மண்டபத்தில்
இடம்பெற்றிருந்தது.

இதன்போது, முல்லைத்தீவு, மாங்குளம், சிலாவத்தை, கொக்குத்தொடுவாய், கர்நாட்டுகேணி, வட்டுவாகல் , ஆறுமுகத்தான்குளம், உடையார்கட்டு , மூங்கிலாறு, ,முள்ளியவளை, விசுவமடு, செல்வபுரம், கூழாமுறிப்பு ஆகிய பிரதேசத்திற்குட்பட்ட  மாவீரர்களின் பெற்றோர்களே மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.

மதிப்பளிப்பு

மாவீரர்களது பெற்றோர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு முதல் நிகழ்வாக கிழக்கு மாகாணத்திலிருந்து வருகைதந்த 4 மாவீரர்களின் பெற்றோரான கு.குணபாலன் , வடக்கு மாகாணத்தை சேர்ந்த 3 மாவீரர்களின் பெற்றோரான மு.மயில்வாகனம் மற்றும் முன்னாள் போராளிகளான அன்பரசன், தரண்சிறி, கர்த்தகன் ஆகியோரினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதனை தொடர்ந்து
விசுவமடு ரெட்பானா பாரதி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவியான எட்மன்
லக்சிகாவின்
வரவேற்பு நடனம் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வின் இறுதியில் மாவீரர்கள் இந்த
மண்ணிற்கு ஆற்றிய உயிர்த்தியாகம் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றதுடன்
பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்களுக்கான மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், கரைதுறைப்பற்று
பிரதேச சபையின் முன்னாள் தபிசாளர்களான விஜிந்தன், தவராசா , கரைதுறைப்பற்று
பிரதேச சபையின் உறுப்பினர் பவுள்ராஜ், சமூக செயற்பாட்டாளர்கள்,
என பலரும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version