Home இலங்கை கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி கப்பல்

0

 இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். ஷல்கி இரண்டு நாள் பயணமாக கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று முன்தினம்(02) வருகை தந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் 64.4 மீற்றர் நீளமும், மொத்தம் 40 கடற்படையினரை கொண்டது

நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும்போது சிறிலங்கா கடற்படையினர் அதன் செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

முக்கிய இடங்களுக்கு செல்லவுள்ள கடற்படையினர்

மேலும் நீர்மூழ்கி கப்பலில் உள்ள கடற்படையினரும் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிட உள்ளனர்.

மேலும், ‘ஐஎன்எஸ் ஷல்கி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (4) அன்று நாட்டைவிட்டு புறப்பட உள்ளது. 

 

NO COMMENTS

Exit mobile version