Home இலங்கை அரசியல் இந்திய எண்ணெய் குழாய் திட்டம்: அரசாங்கம் விளக்கம்

இந்திய எண்ணெய் குழாய் திட்டம்: அரசாங்கம் விளக்கம்

0

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் எண்ணெய் குழாய் அமைப்பது குறித்து எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20.12.2024) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

எண்ணெய் குழாய்

“இந்திய எண்ணெய் குழாய் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனினும், அது தொடர்பில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.

இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக உருவாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானது.” என்றார்.

மேலும் இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராஜ்யம“ ஆகிய நாடுகளுக்கு இடையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய் அமைப்பது குறித்தும் அமைச்சர் இங்கு விளக்கமளித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version