தேர்தலில் வெற்றிப்பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்பி ஷிவானி ராஜா பிரித்தானிய(UK) நாடாளுமன்றத்தில் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
நடைபெற்று முடிந்த பிரித்தானிய தேர்தலில்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 29 வயதான ஷிவானி ராஜா(
Shivani Raja), லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் இருந்து சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லண்டன் முன்னாள் துணை மேயர் ராஜேஷ் அகர்வாலை எதிர்த்து அவர் வெற்றி பெற்றுள்ளார்.
பதவியேற்பு
இந்நிலையில், பதவியேற்பு நேரத்தில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பகவத் கீதை மீது எம்பி ஷிவானி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிகழ்வானது தற்போது பேசப்பட்டு வருகின்றது.
பதவியேற்பின் போது பேசிய அவர், லெய்செஸ்டர் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதை பெருமையாக உணர்கிறேன்,பிரித்தானிய பேரரசரின் உத்தரவுப்படி செயல்படுவேன் என்று பகவத் கீதை மீது சத்தியம் செய்தார்.
37 ஆண்டுகளில் லெஸ்டர் ஈஸ்ட் தொகுதியில் வெற்றி பெற்ற முதல் கன்சர்வேட்டிவ் உறுப்பினரானா் என்பது குறிப்பிடத்தக்கது.
It was an honour to be sworn into Parliament today to represent Leicester East.
I was truly proud to swear my allegiance to His Majesty King Charles on the Gita.#LeicesterEast pic.twitter.com/l7hogSSE2C
— Shivani Raja MP (@ShivaniRaja_LE) July 10, 2024