இதுவரை காலமும் இலங்கையின் புலனாய்வுத் துறை ஒரு மேம்பட்ட அமைப்பாக இருக்கவில்லை என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கான உள்ளீடுகளை இந்தியாவின் புலனாய்வுத் துறையும் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையும் வழங்கி வந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் உடனான போரின் போது கூட ஆயுதக் கப்பல்கள் தொடர்பான தகவல்கள் இந்திய மற்றும் அமெரிக்க புலனாய்வுத் துறையாலேயே வழங்கப்பட்டதாக அரூஸ் கூறியுள்ளார்.
இதனால், இந்தியா மற்றும் அமெரிக்காவின் ஊடுருவலாக தான் இலங்கையின் புலனாய்வுத் துறை இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், 2017ஆம் ஆண்டளவில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களையும் இந்தியாவின் ரோ அமைப்பே இலங்கைக்கு வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில், அவர் கலந்துகொள்ளவிருந்த நிகழ்வு நடைபெறுவதற்கு முதல்நாள் இரவே அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், இந்தத் தகவல் தொடர்பில் இலங்கை புலனாய்வுத் துறையினரும் அறிந்திருக்கவில்லை என அரூஸ் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
