Home இலங்கை சமூகம் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள்: விரைந்து செயற்பட்ட காவல்துறையினர்

வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள்: விரைந்து செயற்பட்ட காவல்துறையினர்

0

வீசா இன்றி இலங்கையில் (Sri Lanka) தங்கியிருந்த 06 இந்தியர்களையும் வரியில்லா சிகரெட்டுகளுடன் ஒரு வெளிநாட்டவர் ஒருவரையும் கட்டுநாயக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க, அடியம்பலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வெளிநாட்டவர்கள் குழுவொன்று தங்கியிருப்பதாக கட்டுநாயக்க காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,000 சிகரெட்டுகளுடன் (50 பொதிகள்) வெளிநாட்டவர் ஒருவருதம் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்த நிலையில், 25, 26, 33, 38, 39 மற்றும் 42 வயதுடைய இந்திய (India) பிரஜைகள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/indians-staying-in-sri-lanka-without-visa-1720763528

NO COMMENTS

Exit mobile version