8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் (Champions Trophy 2025) அடுத்த மாதம் 19 ஆம் திகதி தொடங்கி மார்ச் 9 ஆம் திகதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் (Dubai) ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி group A இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், group B ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்நிலையில், சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்
அந்தவகையில், இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2023-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் போது ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக அணியில் இடம்பெற்றுள்ளார். ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளையில், வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்படவில்லை. விஜய் ஹசாரே தொடரில் 750 ரன்களுக்கு மேல் குவித்துள்ள கருண் நாயருக்கும் இடம் வழங்கப்படவில்லை.
இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா (தலைவர்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.