Home முக்கியச் செய்திகள் வெளிநாடொன்றில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் 70 பேர் பலி

வெளிநாடொன்றில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் 70 பேர் பலி

0

நைஜீரியாவில் (Nigeria) எரிபொருள் தாங்கி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (18.01.2025) இடம்பெற்றுள்ளது.

தலைநகர் அபுஜாவையும் வடக்கு நகரமான கடுனாவையும் இணைக்கும் வீதியில் 60,000 லிட்டர் பெட்ரோலை ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கியே விபத்துக்ககுள்ளாகியுள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை

எரிபொருள் தாங்கி கவிழ்ந்த பிறகு மக்கள் எரிபொருளைப் பெறுவதற்காக ஓடிக்கொண்டிருந்தபோது அது வெடித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இதன்போது 70பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த சம்பவத்தில் இறந்தவர்களில் பலர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து போயிருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அத்துடன் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

https://www.youtube.com/embed/IyLCfcyqgNQ

NO COMMENTS

Exit mobile version